மத்திய மாநிலத்தில் விமான விபத்து – இருவர் பலி.

மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில்  2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை  இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில்  சிமெஸ் அகாடமி என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு இருக்கைகளை மட்டுமே கொண்ட பயிற்சி விமானம் ஒன்று தரை இறங்க முயற்சித்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Cessna 172 என்ற பெயரிடப்பட்ட குறித்த விமானமானது  ஒரு கண்ணாடி காக்பிட் மற்றும் இரவில் பறப்பதற்கான  வசதிகளையும்  கொண்டது என சிமெஸ் அகாடமி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.


Recommended For You

About the Author: ஈழவன்