ராஜஸ்தானில் தொடரும் குழந்தைகள் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம்,  கோடா மாவட்டத்திலுள்ள அரச மருத்துவமனையில், இதுவரை 107 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்சிஜன் குறைபாடு, சுகாதார வசதிகள்  ஆகியவை போதுமான அளவில் கிடைக்கப்பெறாமையினாலே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்காரணமாக  நேற்று முன்தினம் மட்டும் 9 குழந்தைகள்  உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இது குறித்து ஆராய்வதற்காக  மத்திய அரசு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க வேண்டுமென நேற்று (வெள்ளிக்கிழமை)  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க  ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் கடந்தாண்டும்  அரசு மருத்துவமனைகளில்  நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தடுக்க தவறியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்,  உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்