செகண்ட் லுக் போஸ்டரில் விஜய், விஜய் சேதுபதி ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் கடந்த 31ஆம் திகதி வெளியாகிய நிலையில், இதன் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில்  விஜய்,  விஜய் சேதுபதி இடம்பெற்றிருப்பர் என்றும், அதனை விஜய் சேதுபதியின் பிறந்த தினமான ஜனவரி 16-ந் திகதி  வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

விஜய்யின் 64-வது திரைப்படமான இதில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்