அரச அதிகாரிகளை கண்காணிக்க புலனாய்வு பிரிவு களத்தில்.

அரசாங்க ஊழியர்கள் தொடர்பாக ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்களிலும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்