சிம்புவின் மஹா லுக்!

சிம்புவுடன் ஹன்சிகா இணைந்து நடிக்கும் மஹா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
எட்செட்டெரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹன்சிகா முக்கியக் கதாபாத்திரமாக நடித்துவரும் திரைப்படம் மஹா.
ஹன்சிகாவின் 50ஆவது படமான இதில் ‘மஹா’ என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துவருகிறார். இந்தப் படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ளார்.
ஏற்கனவே மஹா திரைப்படத்திலிருந்து சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்திருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 2) மஹா திரைப்படத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Mathiyalagan V@MathiyalaganV9
The very first official outlook of STR in MAHA is out now..🔥🔥🔥🔥🔥🔥 wishing the entire team of MAHA for its great work and Thalaiva SIMBHU specially for making this movie a more special one!!

View image on Twitter
பின்னால் விமானம் இருக்க பைலட் உடையில் சிம்பு இருக்கும் அந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏற்கனவே ஹன்சிகாவை மையப்படுத்தியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
காவி உடை அணிந்து சுருட்டு பிடிப்பது போன்று இருந்த அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. இந்தப் படத்தில் தம்பி ராமையா, சனம் ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்டோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.
வாலு படத்துக்குப் பிறகு சிம்பு – ஹன்சிகா இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor