
யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த 03.01.2019 பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய கபில கடுவத்த, அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமையை அடுத்தே யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.