காற்றாலை மின் தூண்கள் உடைப்பு

காற்றாலை நிறுவனத்துக்கு மின்சாரம் வழங்குவதற்காக இலங்கை மின்சார சபையால் நடப்பட்ட தூண்கள் இனந் தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான மின்சார இணைப்பை வழங்குவதற்காக தூண்கள் நடப்பட்டிருந்தன. அவை தற்போது சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்