திருப்பதிக்கு ஆயிரம் கோடிக்கு மேல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டில் உண்டியல் மூலம் 1,161 கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 கோடியே 78 இலட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டில் காணிக்கையாக 1,161 கோடியே 74 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12 கோடியே 49 இலட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர் என்றும் ஆலய நிர்வாம் அறிவித்துள்ளது.

இதேவேளை  அறை வாடகை மூலம் 83 கோடியே 71 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு,  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாள்தோறும் அவர்கள் செலுத்தும் காணிக்கைகளைத்   திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாக தேவஸ்தானம் சேமித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்