மணல் அகழ்வுக்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

புத்தளம்- உடப்பு  பகுதியில் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உடப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் காலை 11.30 மணிக்கு முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்   அங்கிருந்து  மணல் அகழ்வு இடம்பெறும் பூனைப்பிட்டி பகுதிக்கு பேரணியாக சென்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பூனைப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வு மற்றும் மணலை ஏற்றிச் செல்வதினால் உடப்பு-கரம்பை வீதியின் பல இடங்கள் பழுதடைந்துள்ளதுடன் இந்த மணல் அகழ்வு காரணமாக நீர் வளம் உள்ளிட்ட தங்களின் வளங்கள் அழிவடைவதாக சுட்டிக்காட்டி எழுதப்பட்ட பல்வேறு சுலோகங்களை ஏந்தியாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைத் தலைவர் கே.தெட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்