எதிர்கட்சித் தலைவரானார் சஜித்

எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய, அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்