
ஹப்புத்தளையில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட காயமடைந்த ஒருவர் சிகிச்சைகளுக்காக ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.