ஜேர்மனிய மிருகக் காட்சி சாலையில் தீ

ஜேர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது 30 இற்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்துள்ளன.

தீ விபத்து குறித்து மிருகக் காட்சி சாலை நிர்வாகம் தரப்பில், ‘எங்களது மோசமான பயம் நனவாகிவிட்டது.

பல விலங்குகள் இறந்துவிட்டன. நாங்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களுக்கு உதவ விரும்பியவர்களுக்கு மிக்க நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை இதுவரை மிருகக் காட்சி சாலை நிர்வாகம் ஊடகங்களிடம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்