பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை

பிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார்.

இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70 தடவைகளுக்கு மேல் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டது.

இதனால், அவருக்கு உரிமத்தை இரத்து செய்த நிர்வாகம், அவருக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் அபராதமும், 48,117 அமெரிக்க டொலர்கள் செலவும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்