பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நீக்க அனுமதி ?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய புதி அரசாங்கம் குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்