
பிரான்ஸில் நடுக்கடலில் தத்தளித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 19 புகலிடக்கோரிக்கையாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா செல்ல முயற்சித்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகபட்சமாக 10 பேர் பயணிக்க வேண்டிய சிறிய கப்பலில் 19 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்வர்கள் பிரான்ஸின் டன்கிர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.