நாவற்குழி பகுதியில் பாரிய விபத்து!!

யாழ்.நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரிவிக்கையில்…

மிகையான வேகத்தினால் ஆட்டோவுடன் மோதிய டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி வீதியை விட்டு வெளியே பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor