இன்று பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம்!!

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றின் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறியப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த தீர்மானம் இன்று (வியாழக்கிழமை) அறியப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய. சபாநாயகர் பதவிக்காக அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் பெயரும் ஆளுந்தரப்பு பிரதம அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுந்தரப்பு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor