அரசாங்கத்தின் மீது சுவிஸுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது – தினேஷ்!!!

சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் அதிகாரியின் சம்பவத்தை இலங்கை அரசு கையாண்ட விதம் குறித்து சுவிஸ் அரசு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

கொழும்பில் ஊடகவிலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மூன்று நாட்களுக்கு முன்பு சுவிஸ் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு, இலங்கை அரசாங்கத்தின் நியாயத்தன்மையை தெளிவாகக் சுட்டிக்காட்டுகின்றது.

எனவே இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு உறவையும் நட்பையும் தொடர்ந்து சுவிஸ் பேணுமென நம்புகின்றோம்.

மேலும் சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம், ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயரினை ஏற்படுத்தும்.

எனவே, இத்தகைய செயற்பாட்டினை செயதவர்கள் நாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

அத்துடன், சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் அதிகம் ஆராய்ந்த பின்னரே அந்த தூதரகம் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

எனவே இதனூடாக இலங்கை அரசாங்கத்தின் மீது சுவிஸ் அரசாங்கத்துக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளமையை எம்மால் உணர முடிகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor