வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

வவுனியா காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர்மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனநாயக போராட்டத்தை வன்முறையால் அழிக்க முடியாது, ஐ.நாவே அமைதி காக்கும் படையை உடனே அனுப்பு, அமெரிக்கா ஜரோப்பிய ஒன்றியம் இந்தியா போன்றவை ஓநாய்களிடம் இருந்து தமிழர்களை பாதுகாக்க உடனே வர வேண்டும். தாக்கியவர்களை கடவுள் தண்டிப்பார் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor