இடமாற்றம் பழிவாங்கும் நடவடிக்கை – தமிழ் பொலிஸ்!

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டமை பழிவாங்கல் நடவடிக்கை எனவும், அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 300 தமிழ்ப் பொலிஸார் கடமையாற்றுகின்றார்கள்.

இதில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ் பொலிஸாரும் ஏனைய 4 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ் பொலிஸாரும் கடமையாற்றுகின்றார்கள்.

அவர்கள் அனைவரும் வடமாகாணத்தினுள் வேறு வேறு மாவட்டங்களுக்கு ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையிலையே அவர்கள் இது பழிவாங்கல் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

இதேவேளை யாழில் பொலிஸாருடன் நடைபெற்ற கூட்டமொன்றில் யாழில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமை காரணமாகவே சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த முடியவில்லை என சட்டத்தரணி ஒருவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor