
மலையாள சினிமா உலகில் நடிகைகள் எண்ணற்ற பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது குறித்த அறிக்கை தற்போது வெளியாகி சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இருந்து முன்னணி நடிகைகளால் கூட விடுபட முடிவதில்லை என்றும், அவ்வாறு இணங்க மறுக்கும் நடிகைகளுக்கு மறைமுகமாக வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அத்துடன், மது மற்றும் போதை மருந்துகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடுமையான சட்டத்தின் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.