
கம்பஹா, மாகொல – சிறிமங்கல பகுதியில் நித்திரையில் இருந்த கணவன் மீது கருங்கல்லை எறிந்து அவரது மனைவி கொலை செய்தமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (பதன்கிழமை) இடம்பெற்ற நிலையில், வீட்டை விட்டு வௌியேறிய குறித்த பெண் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 23 வயதுடைய மாகொல, சிறிமங்கல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான குறித்த பெண் மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.