நாட்டின் பல பகுதிகளில் 06ஆம் திகதி நீர்வெட்டு

நீர்கொழும்பு, கண்டி பிரதேச சபை உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வழங்கள் மற்றும் வடிகாலைமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜனவரி 06ஆம் திகதி காலை 09 மணி முதல் அடுத்த நாள் காலை 09 மணி வரை நீர் வெட்டு விநியோகம் அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய கொச்சிக்கடை, தூவ, பிட்டிப்பன, துங்கல்பிட்டிய , பஷியாவத்த, பமுனுகம, கட்டான, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், கட்டுநாயக்க விமானப் படைத்தளம், பண்டாரநாயக்க விமான நிலையப் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடை  அமுல்படுத்தப்படவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்