அஜித்திடம் இருந்து மிகப் பெரிய பாடத்தை கற்றுக்கொண்டேன்

தமிழில் கனா கண்டேன், மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிருத்விராஜ்.

தற்போது அவர், லால் ஜீனியர் இயக்கத்தில் டிரைவிங் லைசன்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தற்போது திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிருத்விராஜ் தனது இரசிகர்களுடன் ருவிட்டரில் கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது நடிகர் அஜித் குறித்து கருத்து தெரிவித்த அவர், “அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். எனது வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை அவரிடம் இருந்தே படித்தேன்.

அவர் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர். அவரது படம் பெரிய வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது. தோல்வி அடைந்தாலும் வருத்தப்படமாட்டார்.

இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் பின்பற்றுகிறேன். நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன்.” எனத் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்