
யாழில் புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கிய நபர் மோதிரத்தை லாபகமாக கழட்டி திருடி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் சுண்டுக்குளி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புத்தாண்டு தினமான நேற்றைய தினம் குறித்த நபர் வீதியோரமாக நின்று வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுள்ளார். அவ்வேளை வீதி வழியாக சென்ற நபர் ஒருவர் அவருடன் பேச்சுக்கொடுத்து சகஜமாக பழகியுள்ளார். பின்னர் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி கை கொடுத்து அவருடன் கைகுலுக்கி உள்ளார்.
கைகுலுக்கிய சமயம் வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவரின் கையில் இருந்த மோதிரத்தை லாபகமான கழட்டி அதனை திருடி சென்றுள்ளார்.
அவர் சென்ற சிறிது நேரத்தின் பின்னரே தனது விரலில் இருந்த மோதிரம் கழவாடப்பட்டத்தை உணர்ந்தவர் அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்