
தாய்லாந்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு திடீரென வெடித்த விபத்தில் பிரித்தானியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடலோர நகரமான பட்டாயாவில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இதில் 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாகவும் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அவர் ஒரு பட்டாசுகளை ஒளிரச் செய்ய முயன்றார், ஆனால் அது முதலில் வெடிக்கவில்லை என்றும் பின்னர் திடீரென வெடித்தமையினாலேயே அவர் உயிரிழந்தார் என்றும் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.