ஒரே நாளில் களமிறங்கும் மூன்று நாயகிகள்!

நயன்தாரா, தமன்னா, தப்ஸி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள மூன்று வெவ்வேறு படங்கள் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளன.

நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள புதிய படம் கேம் ஓவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் தப்ஸி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“கேம் ஓவர் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆகவுள்ளேன். இந்த கதையை நான் கேட்ட உடனே இது மக்களிடம் வரவேற்பு பெறும் படமாக இருக்கும் என தோன்றியது. இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தப்ஸி கூறியுள்ளார்.
இயக்குநர் அஸ்வின் சரவணன், “மாயா திரைப்படம் இப்போதும் ரசிகர்களின் விருப்பத்துக்கு உரியதாக இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்து எனது படம் வெளியாவதற்கு காரணமானவர்கள் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினர். சிறந்த கதைகளை வெளிக்கொண்டுவரும் நிறுவனமாக ஒய் நாட் ஸ்டூடியோஸ் உள்ளது. தப்ஸி பன்னுவுக்கு இது சரியான ரீ என்ட்ரியாக இருக்கும் என நம்புகிறேன்” என அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் அதே நாள் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர்காலம் திரைப்படம் வெளிவரவுள்ளது. சக்ரி டொலட்டி இயக்கிய அப்படத்தின் ரிலீஸ் பலமுறை அறிவிக்கப்பட்டு பின் மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கான காமோஷியில் பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர். பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளன.
தமன்னா, பிரபுதேவா இணைந்து நடித்துள்ள தேவி 2 திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Recommended For You

About the Author: Editor