
இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டமையின் காரணமாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடத்துக்கான நீட் தேர்வு குறித்த விபரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு, மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையத்தள விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி தொடங்கியது.
இந்த தேர்வுக்கு டிசம்பர் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கவாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையிலேயே நீட் தேர்வுக்கான கால அவகாசத்தை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.