
புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.
எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
எனினும், மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.