புதுவருட இரவில் எரியூட்டப்பட்ட மகிழுந்துகள்!

கடந்த 2018 ஆம் ஆண்டு புதுவருட நாளை விட, 2019 ஆம் ஆண்டு புதுவருட நாளில் அதிகளவான மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக Strasbourg நகரில் நேற்று இரவு இச்சம்பவம் அதிகளவில் எரியூட்டப்பட்டுள்ளன. Strasbourg நகர காவல்துறையினர் இது தொடர்பாக தெரிவிக்கும் போது, கடந்த வருட புதுவருட நாளினை விட அதிகளவில் மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும், அதிகளவான பேர் கைது செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது தொடர்பான முழுமையான விபரங்கள்/ எண்ணிக்கைகளை அவர்கள் வெளியிடவில்லை.

குறித்த Strasbourg நகரில் கடந்த வாரங்களில் குறிப்பாக கிருஸ்துமஸ் இரவில் நூற்றுக்கணக்கான மகிழுந்துகள் காரணமின்றி சூறையாடப்பட்டு இருந்தன. இந்த வழக்கிலும் பலர் கைது செய்யப்படிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor