20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

1999 ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புதினை நியமனம் செய்தார்.

அதன்பின் ஜனாதிபதி பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு ஜனாதிபதியாக விளாடிமிர் புதினை நியமித்தார்.

அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புதின் நடத்தினார். இதனால் அவர் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.

அன்று முதல் புதின் ரஷ்யாவில் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 2022 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார்.

ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புதின் இன்று தனது அரசியல் பயணத்தின் 21 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

அவர் 20 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

புதின் மீது பல்வேறு சர்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார்.


Recommended For You

About the Author: Editor