கொள்கை அறிவிப்பின் படி அடுத்தகட்ட தீர்மானம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை கூறியுள்ளார்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் (03) ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, சிம்மாசன உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார்.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor