பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் – பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார்.

பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும்.

அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய வர்த்தக உறவு குறித்து திரு. ஜோன்சன், பேச்சுவார்த்தையைத் தொடங்குவார். அது இவ்வாண்டின் இறுதிக்குள் முடிவடையும் என அவர் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor