கொழும்பில் மீண்டும் காற்று மாசு

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது காற்றின் தரம் 158 சுட்டியாக உயர்ந்வடைந்து மாசடைந்து காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா தூதரகத்தில் அமைந்துள்ள வளிமண்டலத்திலுள்ள வளியின் தூய்மை குறித்து ஆராயும் நிலையம் இது தொடர்பாக அறிவித்துள்ளது.

இதேவேளை புத்தாண்டை வரவேற்கும் முகமாக நேற்று இடம்பெற்ற கொண்டாட்டங்களில் வானவேடிக்கைகளால் ஏற்பட்ட புகையின் தாக்கத்தால் வளிமண்டலத்தில் காணப்படும் வளி மாசடைவதற்கான காரணமாகவிருக்காலம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாகவும் குறிப்பாக சிறுவர்கள், முதியோர்கள் அவதானத்துடன் வெளியில் பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்