டெஸ்ட் துடுப்பாட்ட – பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல்

டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின்; தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் டெஸ்ட் தொடர்களை நடத்தி வருகின்றன.

அத்தோடு, தற்போது நடப்பு ஆண்டுக்கான அனைத்து டெஸ்ட் போட்டிகளும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், ஆண்டின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின்;; புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்கள்.

இந்த பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோஹ்லி, 928 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 911 புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 822 புள்ளிகளுடன் தொடர்ந்தும் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலியாவின் மார்னஸ் லபுஸ்சகன் ஒரு இடம் ஏற்றம் கண்டு 805 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் செடீஸ்வர் புஜாரா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 791 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 767 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வோர்னர், ஒரு இடம் ஏற்றம் கண்டு 759 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் அஜிங்கியா ராஹனே 759 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் ஜோ ரூட், 754 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் குயிண்டன் டி கொக் எட்டு இடங்கள் ஏற்றம் கண்டு 712 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல்.

இதில் அவுஸ்ரேலியாவின் பெட் கம்மின்ஸ் 902 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர் ஒரு இடம் ஏற்றம் கண்டு 859 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் கார்கிஸோ ரபாடா, ஒரு இடம் ஏற்றம் கண்டு 832 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் ஜேஸன் ஹோல்டர் 830 புள்ளிகளுடன் தொடர்ந்தும் நான்காவது இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் வெர்னொன் பிளெண்டர் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 500 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் ஜஸ்ரிபிரிட் பும்ரான 794 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஸ்டாக், இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 790 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹெசில்வுட் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 777 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் அஸ்வின் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 772 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் மொஹமட் ஷமி, இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 771 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்