
வடக்கு- கிழக்கு பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த செயற்பாட்டை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
அதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் குறித்த இடங்களில் அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.கே.பி ஹரிஸ்சந்திர கூறியுள்ளார்.