புத்தாண்டு வழிபாடு.

இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

அதேபோல மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. காலை வேளையிலேயே பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும் மசூதிகளில் விசேட தொழுகைகளும் இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

 


Recommended For You

About the Author: ஈழவன்