
மட்டக்களப்பு வாழைச்சேனையில் வியாபார நிலையமொன்றுக்கு சில விசமிகள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுகின்றது.
இந்த சம்பவம் நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள சில்லறை வியாபாரக் கடையே இவ்வாறு தீயினால் எரிந்து முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கடையில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.