‘ராயாவுக்கு’ நினைவு முத்திரை!!

கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வின் போது புனித பொருட்களை சுமந்து செல்லும் மு ராயாவின் உருவப்படத்துடனான நினைவு முத்திரை ஒன்று இன்று வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான வைபவம் நென்கம என்ற இடத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு அமைச்சர் பந்துள குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் லகஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை குறித்த யானை இலங்கை தலதா மாளிகைக்கு கொண்டுவரப்பட்டு 41 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக வைத்தியர் ஹர்ஸ தர்மவிஜய தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor