டெங்கு பரிசோதனைக்கு கட்டணம் அறவீடு!!

டெங்கு நோய் தொடர்பான இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டண அறவீடு செய்யப்படவுள்ளது.

நுளம்புகள் பெருக்கத்தினால் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கத்தினைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அடுத்த ஆண்டு முதல் முழுமையான இரத்தப் பரிசோதனை (Full blood count) மற்றும் NS1 (Dengue Antigen Test) ஆகியவற்றுக்கு இந்த முறை அமுல்ப்படுத்தப்படும் என டெங்கு நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விலை நிர்ணயத்தை அனைத்து தனியார் வைத்திய சாலைகளும் பின்பற்ற வேண்டும் என்றும் , இந்த கட்டண நிர்ணயத்தை அடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் தரம் குறைவடையக் கூடாது அத்தோடு சேவைகளும் தரமுள்ளதாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NS1 (Dengue Antigen Test) பரிசோதனைக்காக 2350 ரூபாவில் இருந்து 2400 ரூபா வரையில் கொழும்பில் உள்ள 2 வைத்திய சாலைகளில் அறவிடப்படுகின்றதாக சுட்டிக்காட்டிய அவர், முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு 600 ரூபா மட்டுமே அறவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்திய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் காரணமாக டெங்கு நுளம்புகள் வெகுவாக அதிகரித்திருப்பதாக டெங்கு நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் அநுர ஜெயசேகர தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor