அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய ஐந்தாவது தடவையாக அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.


Recommended For You

About the Author: Editor