வவுனியாவில் போதைப் பொருளை பேருந்தில் கடத்த முயன்ற இளைஞன் கைது!

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பஸ்ஸில் கடத்த முயன்ற இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் சோதனைச் சாவடியில் வைத்தே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனியார் பஸ்ஸில் ஒரு கிலோகிராம் நிறையுடைய ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோதே குறித்த 24 வயதுடைய இளைஞர் கதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor