படகு மூலம் வந்த ஐவர் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது!!

சட்டவிரோதமாக தென்னிந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகை தந்த ஐவரை ஶ்ரீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி இவர்கள் நெடுந்தீவு பகுதிக்கு படகு மூலம் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 5 அகதிகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இங்கிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஏனையவர்கள் பேசாலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor