யானையின் சடலம் மீட்பு.

வவுனியா – அநுராதபுரம் எல்லையோரத்தில் ஹொரவப்பொத்தானை வீதி கலாபுளியங்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் உடல் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள விஷேட அதிரடி படையினரின் முகாமிற்கு அண்மித்து வீதியோரத்தில் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் கலாபுளியங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விஷேட அதிரடி படையினர் அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததுடன் யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்