ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது நில அதிர்வும் அதனைதொடர்ந்து ஆறு நிமிடங்கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் 2வது நில அதிர்வும், 3வது மற்றும் 4வது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் நேற்று மாலை 5 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

அந்தவகையில் ஹுன்சா, கில்ஜித், ஸ்கார்டூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நில அதிர்வு ஏற்பட்டபோது வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் இஸ்லாமாபாத், ராவல்பண்டி போன்ற இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்