
கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.