வாகரையில் காடழிப்பின் பின்னணியில் காணி உத்தியோகத்தர் !!

வாகரை பிரதேசத்திலுள்ள காடுகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று தீ வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாகரை பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காடுகளுக்கு சில விசமிகள் தீ வைத்துள்ள நிலையில் இது தொடர்பில் பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதன்பிரகாரம் வாகரை பொலிஸார், வாகரை இராணுவம், வாகரை வனஇலகா அதிகாரி மற்றும் வாகரை பிரதேசசபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் வாகரை பிரதேசத்திலுள்ள சில காடுகளை தீ வைத்து அழிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வாகரை பொலிஸார் ஈடுபட்டு வருவதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இப்படி இருக்க இச் சம்பவத்தின் பின்னணியில் வாகரை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் வேந்தன் இருப்பதும் அம்பலமாகியுள்ளது அது தொடர்பில்…

கடந்த காலங்களில் வாகரை பிரதேச செயலக பிரிவிற்கு முன்பாக விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்டு வந்த விவசாய பண்ணை வளம் மிக்க ஒரு விவசாய நிலமாகும்.

வெளிமாவட்டத்தை சேர்ந்த சில பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இந்த காணியை வழங்க, திட்டமிட்ட வகையில் வாகரை பிரதேச செயலகத்தில் நீண்ட நாட்களாக ஊழல் மற்றும் மோசடிகளோடு கிழக்கு மாகாணசபையின் காணி ஆணையாளரின் வழிநடத்தலில் வேந்தன் என்பவர் தீ வைத்துள்ளமை பிரதேசசெயலகத்திலிருந்து கதை கசிந்துள்ளது.

குறித்த வேந்தன் இன்னும் ஒருசில ஆண்டுகள் அந்த பகுதியில் நீடித்ததால் வாகரை பிரதேச செயலகத்தின் வரைபடத்தை மாற்றிவிடுவார் என கிராம அபிவிருத்தி சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணி உத்தியோகத்தரான வேந்தன் என்பவர் இடமாற்றம் பெற்று சென்றிருந்த நிலையில் மீண்டும் வாகரைக்கு வந்துள்ளார். அவர்கள் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து நாசகார விடயம் பலவற்றை செய்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor