T20 தொடரில் மெண்டிஸ்- பெரேரா நீக்கம்

இந்தியா அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு லசித் மாலிங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, உப தலைவராக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சமீபகாலமாக ரி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் பானுக ராஜபக்ஷ அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதவிர அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் ஒசேத பெனார்டோ ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், தனஞ்சய டி சில்வாவும் நீக்கப்பட்டுள்ளார்.

அணியின் முழுமையான விபரம்,

லசித் மாலிங்க தலைமையிலான இந்த அணியில், தனுஷ்க குணதிலக, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, பானுக ராஜபக்ஷ, அஞ்சலோ மெத்யூஸ், ஒசேத பெர்ணான்டோ, தசுன் சானக்க, செஹான் ஜெயசூரிய, லக்ஷான் சந்தகென், வனிது ஹசரங்க, இசுரு உதான, லஹிரு குமார, நுவன் பிரதிப், கசுன் ரஜித ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் இந்த அணியே எதிர்வரும் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இத்தொடருக்கான இந்தியா அணி அறிவிக்கப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டு இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.

இத்தொடரின் முதல் ரி-20 போட்டி, ஜனவரி மாதம் 5ஆம் திகதி குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்