புதிய அரசாங்கத்தின் 8ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர்

எட்டாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்  இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது அத்தியாயத்தின் முதலாம் உறுப்புரைக்கு அமைய, நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதற்கமைய, கடந்த 2ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னம் அமையவுள்ளது.

அதன் பின்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பிரசன்னமாகவுள்ளனர்.

இதன்போது, சபாநாயகரினாலும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினாலும் ஜனாதிபதி வரவேற்கப்படுவார்.

அத்துடன், ஜனாதிபதியின் பிரசன்னத்தை முன்னிட்டு 21 மரியாதை வேட்டுகள் முழக்கம் இடம்பெறும் என சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அக்கிராசணத்தில் அமர்ந்து புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிவிப்பை வெளிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்