விபத்தில் 4 விமானப்படையினர் பலி.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் தும்மோலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 விமானப்படையினரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


Recommended For You

About the Author: ஈழவன்